Ad Code

Responsive Advertisement

Headlines

10/recent/ticker-posts

அரசு பள்ளி மாணவன் கால் துண்டான விவகாரம் - பேருந்து டிரைவர் கைது

 

மாநகர பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் 2 கால்களும் துண்டான விவகாரத்தில், பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டார். குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி 4 ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் சந்தோஷ் (16), பள்ளி முடிந்து மாநகர பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார்.


படிக்கட்டில் தொங்கியபடி சென்ற அவர் தவறி விழுந்தார். பஸ்சின் பின் சக்கரம் அவரது கால்களில் ஏறி 2 கால்களும் அகற்றப்பட்டது. மருத்துவமனையில் மாணவன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கிய டிரைவர் கோவூரை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement