LightBlog

Tuesday, October 22, 2024

Youtuber இர்பான் செயல் மன்னிக்க முடியாதது - அமைச்சர் கண்டிப்பு

 




ழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட, இர்பானை மன்னிக்க முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


பிரபல யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட, இர்பானை மன்னிக்க முடியாது. தற்போது இர்பான் செய்தது மன்னிக்கக் கூடியது அல்ல; கண்டிக்கக் கூடியது. இந்த விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


தவறு செய்தவர்களை காப்பாற்ற தி.மு.க., அரசு எப்போதும் நினைக்காது. இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும், விட மாட்டோம். சட்டம் ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.



No comments:

Post a Comment

LightBlog