சேலம் மாவட்டம், ஆத்துார், காந்தி நகரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 2,232 மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், பள்ளி சுற்றுச்சுவர் ஏறி வந்த மர்ம நபர்கள், கழிப்பறைக்கு சென்ற மாணவி ஒருவரை வாயில் துணி வைத்து, பாலியல் தொந்தரவு செய்ததாக தகவல் வெளியானது.
இதையறிந்த மற்ற மாணவியரின் பெற்றோர்கள் நேற்று மதியம் பள்ளியை முற்றுகையிட்டு, 'பாலியல் தொந்தரவு அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மற்ற மாணவியருக்கு பாதுகாப்பு வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார், 'மாணவி மீதான பாலியல் தொந்தரவு குறித்து, 'சிசிடிவி' கேமரா மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்து, அதுபோன்று புகார் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியின் சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிப்பது, கழிப்பறை பாதுகாப்பு போன்றவை குறித்து கலெக்டர் மூலம் இதற்கான தீர்வு காணப்படும்' என்றனர்.
'ஒரு மாதத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment