தூத்துக்குடியில் ஆசிரியர்கள் அடித்ததாக 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியில் அரசு உதவி பெறும் KKR.TDTA உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் முத்துக்கிருஷ்ணன். இந்த மாணவன் இன்று (ஜூன் 24) ஆசிரியர்கள் திட்டியதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் எழுதிய கடித்தத்தில், தனது இறப்புக்கு பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து மொத்தம் நான்கு ஆசிரியர்கள் தான் காரணம் என கூறியியுள்ளார்.
இது குறித்து முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர்கள் சாதி சான்றிதழ் கொடுக்க அலைக்கழித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட ஆசியரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் முத்து கிருஷ்ணன், தன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment