Ad Code

Responsive Advertisement

Headlines

10/recent/ticker-posts

பெற்றோர்களே உஷார்! - கடனை திருப்பித் தராததால் நண்பனின் 2 குழந்தைகள் கொலை

 



ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை போலீசார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அதே போல் வசந்த், வியாழக்கிழமை மாலையும் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்தின் செல்போனுக்கு அழைத்துள்ளார் யோகராஜ். ஆனால், அவரது


செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் அச்சமடைந்த யோகராஜ், உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர், குழந்தைகளின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வசந்த்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்க்கொண்டனர்.


வசந்திடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ‘யோகராஜ்க்கு வசந்த் ரூ.14,000 கடனாக கொடுத்திருக்கிறார். அதை திருப்பிக் கேட்ட போது யோகராஜ் தர மறுத்து வந்துள்ளார். இதையடுத்து வசந்த்துக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் யோகராஜின்


இரண்டு குழந்தைகளை வசந்த் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.



Post a Comment

1 Comments

  1. கடன் அன்பை மட்டும் முறிக்காது உயிரையும் பறிக்கும்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement