Ad Code

Responsive Advertisement

Headlines

10/recent/ticker-posts

தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு

 



தக்காளி, பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றின் வரத்து குறைவுகாரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.80 இருந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்ட பீள்ஸ் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 க்கும் பீன்ஸ் ரூ.280 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து காய்கறிகள் விலை விவரம்;


ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 க்கும், சின்ன வெங்காயம், கேரட் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ.70 க்கும், சவ் சவ் முள்ளங்கி மற்றும் முங்கைக்காய் ரூ.40க்கும், உருளைகிழங்கு ரூ.35 க்கும் முட்டைகோஸ், சுரைக்காய், காராமணி, பாவற்காய் ரூ.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


கத்திரிக்காய், கோவைக்காய், புடலங்காய், சேனை கிழங்கு ரூ.50, கொத்தவரங்காய் ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலிபிளவர் ரூ.35 க்கும் பச்சை மிளகாய் ரூ.90 க்கும் பட்டாணி ரூ.250 க்கும் இஞ்சி ரூ.180 க்கும் பூண்டு ரூ.350க்கும் எலுமிச்சை பழம் ரூ.120 க்கும் நூக்கல்ரூ. 60 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


* பூக்கள் விலை சரிவு

கனமழை காரணமாக பூக்கள் வாங்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று மக்கள் வரவில்லை. இதன் காரணமாக ஒரு கிலோ மல்லி ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


ஐஸ் மல்லி ரூ.800 லிருந்து ரூ.250க்கும் ஜாதி மல்லி, முல்லை ஆகியவை ரூ.600 இருந்து ரூ.200க்கும் கனகாம்பரம் ரூ.100லிருந்து ரூ.30க்கும் சாமந்தி ரூ.260 லிருந்து ரூ.80க்கும் சம்பங்கி ரூ.300லிருந்து ரூ.50க்கும் அரளி பூ ரூ.500 லிருந்து ரூ.100 க்கும் பன்னீர்ரோஸ் ரூ.180 லிருந்து ரூ.40 க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.350 லிருந்து ரூ.70 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement