Ad Code

Responsive Advertisement

Headlines

10/recent/ticker-posts

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

 




சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்ட அறிவிப்பு: 


சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 13.11.2024 முதல் 15.11.2024 வரை கொச்சியில் நடைபெற உள்ளது. 


மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.inல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் என்ற 9566239685, 6379179200, 044-22505886/ 044-22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். 


இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்துகொண்டு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்விச்சான்றிதழ் பாஸ்போட், அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். 


அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement