பிரான்ஸ் நாட்டில் உள்ள, 'டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனம், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'டிட்கோ' நிறுவனத்தின், 'டான்காம்' மையம் வாயிலாக, 'டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனம், இதுவரை, 20,000 மாணவர்களுக்கு, உயர்தொழில்நுட்ப பயிற்சி வழங்கியுள்ளது. தமிழகத்தில், 'கனவு ஆசிரியர்' விருது பெற்ற ஆசிரியர்கள் உடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளார்.
அந்நாட்டில் உள்ள டசால்ட் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, அதன் தலைமை அலுவலகத்திற்கு மகேஷ் சென்றார். அதிகாரிகளுடன் கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தமிழகத்தில் அதிக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்' என, டசால்ட் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு, முதல்வரிடம் எடுத்துரைத்து, அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக, மகேஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment