25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் - Seithisudar

Monday, June 23, 2025

25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்

 




25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் - வருவாய்த்துறை சங்கத்தினர் முடிவு


அவிநாசி தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க மாநில தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot