தமிழகத்தில் துவக்கப்பள்ளிகளில் 2017ல் தான் கடைசியாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதற்கு பின் நிரப்பப்படவே இல்லை.
மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 99 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருந்தனர். அப்போதே துவக்கக்கல்வியை மேம்படுத்த ஓராசிரியர் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில் 2025 மே மாதம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்றுள்ளனர். சில பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியர்களே தலைமை ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பு பார்க்கின்றனர். இவர்களை தவிர்த்து ஒரு ஆசிரியர் மட்டுமே உடன் பணிபுரிகின்றனர். இத்தகைய ஈராசிரியர் பள்ளிகளில் பல தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதால் ஈராசிரியர் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாறி உள்ளன.
மாவட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வேறு வரவுள்ளதால் இனி பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பில்லை என்ற பேச்சு உள்ளது.
கவுன்சிலிங், அரசாணை 243 மூலம் நிரப்பிய பின்னும் இன்னும் காலிப்பணியிடங்கள் இருக்கும். எனவே இந்த கல்வியாண்டிலேநிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment