அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் - Seithisudar

Sunday, June 22, 2025

அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

 



அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் - கட்சி நிர்வாகி மீது புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டாத்தூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாக்கியராஜின் மகன் 10-ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் குரூப் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாக்கியராஜ், மற்றொரு கட்சி நிர்வாகியான வேலுவுடன் பள்ளிக்குள் சென்று தலைமை ஆசிரியர் தமிழ்முருகனிடம் வாக்குவாதம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அரசு பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியருக்கு விசிக நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கட்சி நிர்வாகி மீது பள்ளி தரப்பில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், போராட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot