அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை அந்த மாநில கல்வித்துறை நீக்கியுள்ளது.
பிகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக முன்னறிவிப்பு மற்றும் காரணமின்றி பள்ளி விடுப்பு எடுத்ததன்பேரில் பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோர்கள் சரியான காரணத்தை கடிதம் மூலம் சமர்ப்பிக்குமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களில் பலர் கடிதம் எழுதி கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். ஆனால், சுமார் 3,32,000 பேரின் பெற்றோர்கள் எந்தவித பதிலும் அளிக்காததால் கல்வித்துறை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்வித்துறை தகவலின்படி, நான்காம் வகுப்பு படிக்கும் 46,000 மாணவர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. அதேபோன்று 5-ம் வகுப்பு 44 ஆயிரம் மற்றும் 6-ம் வகுப்பைச் சேர்ந்த 39 ஆயிரம் பேரும், மற்ற வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் கட்டாயம் 75 சதவீத வருகைப் பதிவு பெற்றிக்க வேண்டும் என கல்வித்துறை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. இதைத்தவிர எந்த ஒரு மாணவரும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுக்கக்கூடாது, அவ்வாறு தவறினால், சரியான காரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment