பூமியின் அடிப்பாகத்தில் குளிர்ச்சி அடையாமல் இருக்கும் நெருப்புக் குழம்பானது சில சமயங்களில் பூமியின் மென்மையான பரப்பின் மீது வரும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.
நிலநடுக்கம் வந்த பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை ரிக்டர் அளவில் எடுக்கும் முயற்சிகளை மட்டுமே மனிதனால் எடுக்க முடிகிறது.
ஆனால் நிலநடுக்கம் வருவதற்கு முன்கூட்டியே விலங்குகள் மற்றும் பறவைகளால் உணர முடியும் என்று நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே கூறி வருகின்றார்கள்.
நிலநடுக்கம் வருவது விலங்குகளுக்கு தெரிவது எப்படி?
பொதுவாக விலங்குகள் அனைத்தும் பூமியில் தரையின் மீது தன்னுடைய காதுகளை வைத்து தூங்குகிறது.
எனவே தரைக்கும் விலங்குகளுக்கு தொடர்பு உள்ளதால், தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளை கூட விலங்குகளினால் உணர முடிகிறது.
மேலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும். கடல் நீர் கலங்கி இயற்கையான கடல் நீர் நிறத்தில் இருந்து, வேறுபட்டுக் கணப்படும்.
இந்த மாற்றங்களை எல்லாம் பறவைகள் உணர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விடும் என்று நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து கூறி வருகின்றார்கள்.
No comments:
Post a Comment