இறப்பு சான்றிதழ் வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இளநிலை உதவியாளருக்கு கடலுார் கோர்ட்டில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார், பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன், 62; இவர், தனது உறவினர் தண்டபாணி என்பவரின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக, கடந்த 2016ம் ஆண்டு கடலுார் நகராட்சி (தற்போது மாநகராட்சி) அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, இளநிலை உதவியாளராக பணிபுரிந்த ராமன், 47; இறப்பு சான்றிதழ் வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து குணசேகரன், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி, அக்., 27ம் தேதி, நகராட்சி அலுவலகத்தில் ராமனிடம், குணசேகரன் 3,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார், ராமனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை கடலுார் தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து, நீதிபதி பிரபாகர் நேற்று தீர்ப்பு கூறினார். குற்றவாளி ராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் மேற்பார்வையில் அரசு தரப்பில் பாலரேவதி ஆஜரானார்.
No comments:
Post a Comment