செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு - Seithisudar

Sunday, October 22, 2023

செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

 



நடப்பாண்டில் செப்.30-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு:


நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடி கலந்தாய்வு மூலம்எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.


இந்தச் செயல்பாடுகள் ஆணையத்தின் விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் புறம்பானது. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.


எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்திருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot