திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் அந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமியின் தந்தை புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து ஒரு வாலிபரிடம் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதன் முடிவுகள் இன்னும் வராத நிலையில் சிறுமி திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஒருபுறம் மகள் கர்ப்பமாக இருப்பதும், மற்றொருபுறம் மனைவி இறந்த துக்கத்திலும் இருந்த சிறுமியின் தந்தை நேற்று மனைவி தூக்கிட்டு இறந்த அதே அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment