3,6,9- ஆம் வகுப்புகளுக்கு பி.எட். கல்லூரி மாணவர்கள் மூலம் திறனறி தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு - Seithisudar

Monday, October 9, 2023

3,6,9- ஆம் வகுப்புகளுக்கு பி.எட். கல்லூரி மாணவர்கள் மூலம் திறனறி தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு

 

பி.எட்., எம்.எட். படிக்கும் மாணவர்கள் மூலம் பள்ளிகளில் திறனறித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநில கல்வி சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வு நவ. 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 27,047 பள்ளிகளைச் சேர்ந்த 7.42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


இத்தேர்வுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மேலும் 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1,356 வட்டார ஒருங்கிணைப்பாளர்களும், 29,775 கள ஆய்வாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.


இதில் கள ஆய்வாளர்களாக பி.எட்,எம்.எட், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி திறனறித்தேர்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஏற்கெனவே தேசிய சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வை ஆசிரிய பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள் நடத்தினர். ஆனால் மாநில கல்வி சாதனை ஆய்வு என்ற திறனறித் தேர்வை பி.எட்., எம்.எட். போன்ற கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி நடத்து கின்றனர்.


இது ஏற்புடையது அல்ல. ஆசிரியர்களை அவமதிக்கும் செயல். இது தேசியக் கல்விக் கொள்கையின்படி உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்தாலும், வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot