உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் இருந்து வருகின்றன. முன்பெல்லாம் வயதனவர்களுக்கு மட்டுமே ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்கள் ஏற்பட்ட நிலையில் சமீப ஆண்டுகளாக இளைஞர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் இதய பாதிப்புகள் காணப்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் இதய நோய்களுக்கு காரணமாக இருக்கும் ஃபேமிலி மெடிக்கல் ஹிஸ்ட்ரி, வயது உள்ளிட்ட ஆபத்து காரணிகளை மாற்ற முடியாது. ஆனால் இதய நோய்க்கான உங்கள் ஆபத்தை குறைக்க பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அந்த வகையில் பஸ் ஸ்டாப், அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து செல்வது, சில மணி நேரங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளை செய்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் அகால மரணம் போன்ற பல அபாயங்களைக் குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
படிக்கட்டுகளில் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்வது உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகள் நன்மைகள் அளிக்க கூடியது என்றாலும் எவ்வளவு நேரம் அவற்றை செய்வது உடலுக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் தொடர்ந்தது ஒர்கவுட்ஸ்களில் ஈடுப்பட முடியாத நபர்களுக்கு உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்று நம்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொத்த ஆக்டிவிட்டி லெவல்களை பொருட்படுத்தாமல், நீண்ட கால செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் சார்லஸ் பெர்கின்ஸ் மையத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் இம்மானுவேல் ஸ்டாமடாகிஸ் பேசுகையில், சமீப ஆண்டுகளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சிகள் மட்டுமல்ல, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது முதல் தரையை வேகமாக துடைப்பது வரை பல அன்றாட செயல்பாடுகளும் உதவுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் குறைந்த நேரமே மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அன்றாட செயல்பாடுகள் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்பதை பற்றி நமக்கு மிகக்குறைவாகவே தெரியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் எல்லா வகையான ஆக்டிவிட்டிஸ்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் சிறிய அளவில் செய்யப்படும் தினசரி வேலைகள் கூட நீங்கள் எவ்வளவு அதிகமாக ஆற்றலை செலவழித்து செய்கிறீர்களோ அவ்வளவு நன்மைகளை பெற வாய்ப்புள்ளது என்றார்.
மூத்த ஆய்வாசிரியர் மேத்தேயு அஹ்மதி இந்த ஆய்வு தொடர்பாக பேசுகையில், தினசரி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இது போன்ற உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடுவது சிறந்த பலன் தர கூடியவையாக இருக்கின்றன. எனினும் இத்தகைய செயல்பாடுகளில் மக்கள் எவ்வளவு தீவிரமாக மற்றும் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமானது என்கிறார்.
No comments:
Post a Comment