தியாகி சங்கரய்யா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்! - Seithisudar

Wednesday, November 15, 2023

தியாகி சங்கரய்யா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 


4f4

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தியாகி சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 102.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 


இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா,  சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad