PF கணக்கை செக் பண்ணுங்க - Seithisudar

Saturday, November 11, 2023

PF கணக்கை செக் பண்ணுங்க

 




ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23 நிதியாண்டிற்கான வட்டியை EPF கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கியுள்ளது. சந்தாதாரர்கள் விரைவில் தங்கள் மொத்த PF இருப்பில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யப்பட்ட தரவுகளை பெறலாம் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.


மேலும் ஏற்கனவே பல பகுதிகளில் EPFO ​​உறுப்பினர்கள் வட்டித் தொகையைப் பெற்றுள்ளனர். தற்போது, ​​2022-23 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.15% ஆகும், இதன் மூலம் மத்திய அரசு ஒவ்வொரு EPF கணக்குகளில் இருக்கும் பணத்திற்கும் 2022-23 நிதியாண்டுக்கு 8.15 சதவீத வட்டி வருமானத்தை டெபாசிட் செய்யும். டெபாசிட் செய்யும்.


பிஎஃப் கணக்குகளுக்கு வட்டி வரவு வைப்பது குறித்து டிவிட்டரில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை அமைப்பு, வட்டி தொகையை டெபாசிட் செய்வதற்கான பணிகள் செயல்முறையில் உள்ளது என்று தெரிவித்தது மட்டும் அல்லாமல் விரைவில் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதற்கான விபரம் தெரிய வரும் என தெரிவித்தகது.


மேலும் ஈபிஎப்ஓ வட்டி தொகையை டெபாசிட் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உறுப்பினர்களுக்கு எவ்விதமான வருமான இழப்பும் ஏற்படாது என விளக்கம் கொடுத்து, அனைவரையும் பொறுமை காக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தது. மேலும் ஈபிஎப்ஓ கணக்கில் பேலென்ஸ் தொகையை எப்படி செக் செய்வது..?


ஆன்லைனில் EPFO ​​இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்


முதல் படி: முதலில் https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php என்ற இணையபக்கத்திற்கு செல்லவும்.


2ஆம் படி: ஹோம்பேஜ்-ல் 'SERVICES' என்பதைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து 'ஊழியர்களுக்கான' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


3ஆம் படி: 'உறுப்பினர் பாஸ்புக்' இணைப்பைக் கிளிக் செய்யவும், அது உள்நுழைவு பக்கத்திற்கு வழிவகுக்கும்.


4ஆம் படி: உங்கள் யுனிவர்சல் கணக்கு எண் (UAN), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி கணக்கில் உள்நுழைக.


5ஆம் படி: இதன் மூலம் உங்கள் கணக்கு விவரங்கள் மற்றும் EPF இருப்பை நீங்கள் சரிபார்க்கலாம்.


UMANG ஆப் மூலம் EPF இருப்பு செக் செய்வது எப்படி


முதல் படி: உமாங் பயன்பாட்டைத் திறந்து, உங்கள் மொபைல் எண் மற்றும் OTP அல்லது MPIN ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்


2ஆம் படி: உள்நுழைந்த பிறகு EPFO ​​ஐத் தேர்ந்தெடுக்கவும்


3ஆம் படி: வியூ பாஸ்புக்கை கிளிக் செய்யவும்


4ஆம் படி: உங்கள் UAN ஐ உள்ளிட்டு, OTP பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.


5 ஆம் படி: உங்கள் EPF கணக்கு விவரங்களை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் பல நிறுவனங்களில் பணியாற்றி இருந்தால் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து இ-பாஸ்புக்கைப் பதிவிறக்கவும்.


எஸ்எம்எஸ் மூலம் EPFO ​​கணக்கின் பேலென்ஸ் தொகையை செக் செய்வது எப்படி..?


உங்கள் UAN-ஐ பயன்படுத்தி எஸ்எம்எஸ் மூலமாகவும் EPFO ​​ பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும். EPF கணக்கின் இருப்பு விவரங்களை ஆங்கிலத்தில் பெற, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு "EPFOHO UAN ENG" என்று அனுப்பவும். இந்தச் சேவை இப்போது ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot