தொலைதூரக் கல்வி சேர்க்கை செப்.20 வரை நீட்டிப்பு - IGNOU பல்கலை. அறிவிப்பு - Seithisudar

Friday, September 13, 2024

தொலைதூரக் கல்வி சேர்க்கை செப்.20 வரை நீட்டிப்பு - IGNOU பல்கலை. அறிவிப்பு

 



தொலைதூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு பல்கலைக் கமான இக்னோ, தொலைதூர்க் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.


இந்நிலையில், மாணவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில்கொண்டு, ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி செப்டம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருகிற 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


இந்த கடைசி நேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டர் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) விரிவாக அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரங்கள் பெறலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot