தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.21ம் தேதி வரை இந்த நிலை தொடரும். தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்; அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது.
இதனால் ஓரிரு நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கலாம். வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் வெளியில் செல்வோருக்கு உடல்ரீதியாக அசவுகரியம் ஏற்படலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment