சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - 14 கோரிக்கைகள் என்னென்ன? - Seithisudar

Tuesday, October 8, 2024

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - 14 கோரிக்கைகள் என்னென்ன?

 




சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையில், ஒரு தரப்பு தொழிலாளர்கள் உடன்பாடுகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சிஐடியு தொழிற்சங்கம் மட்டும்  போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளது.  

 

சாம்சங் ஊழியர்களின் போரட்டம் தொடர்பாக ஆணையர் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏட்டப்படவில்லை. 


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின்  அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா மற்றும்  சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையிலும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையிலும் தலைமைச் செயலகத்தில்  முத்தரப்பு  பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் 14  கோரிக்கைகளுடன் உடன்பாடு ஏற்பட்டு  ஒரு தரப்பு தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் படி, "  


1. நிறுவனம் பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து  ஊதியத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும்.


2. ஒரு இடைகால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/- வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும். 


3. இந்த சிறப்பு ஊக்கத்தொகை 2025-26 நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுடன் சேர்த்து கணக்கிடப்படும்.


4. தற்பொழுது உள்ள 5 வழித்தடங்களில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் இயக்கம் அடுத்த ஆண்டுக்குள் 108 வழித்தடங்களுக்கு  விரிவுபடுத்தப்படும்.


5. தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் வருடத்திற்கு 4 எண்ணிக்கையிலிருந்து 6ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்கும் குடும்பத்திற்கு சுமார் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.


6. பணியில் இருக்கும் தொழிலாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக ரூ.1.00.000 (ரூபாய் ஒரு இலட்சம்) கூடுதல் உதவித்தொகையாக வழங்கப்படும்.


7. கம்பரஸர் கட்டிடத்தில் ஒரு புதிய மருத்துவ அறை நிறுவப்படும்.


8. கேண்டீனில் வழங்கப்படும் உணவு எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், உணவு வகைகளின் உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும்.


9. தொழிற்சாலையில்' தொழிலாளர்களின் ஓய்வறைகள் மேம்படுத்தப்படும். மேலும், பழுதடைந்த லாக்கர்கள் மாற்றப்படும்.


10. தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இடையில் செல்லும் பாதைக்கு கூரை அமைத்துத் தரப்படும்.


11. தொழிலாளர்களுக்கு கீழ்கண்டவாறு விடுப்புகள் உயர்த்தி வழங்கப்படும்.


 (I).திருமணம் செய்யும் தொழிலாளர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். 

 

(II).முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கான தந்தையர்களுக்கு மகப்பேறு (ஆண் தொழிலாளர்களுக்கு) விடுப்பு மூன்றிலிருந்து ஐந்து நாட்களாக உயர்த்தி அதிகரிக்கப்படும்.


(III)பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து விடுமுறை எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் செய்யப்படும்.


12. தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு ரூ.2,000/- பரிசாக வழங்கப்படும்.


13. தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு, "MD's People First Promise," என்ற திட்டம் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.


14. தொழிலாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து கண்டறிய குறை தீர்ப்பு மையம் மேம்படுத்தப்படும்." என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டு ஒரு தரப்பு தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதேநேரம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு திரும்புமாறு  அமைச்சர் தாமோ அன்பரசன் கேட்டுக்கொண்டார்.  


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot