படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களையும் சிறப்பான கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசினார்.
படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களையும் சிறப்பான கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசினார்.
‘வானவில் மற்றும் இலக்கிய மன்றம், கலைத்திருவிழா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க செய்து, மாணவர்களின் தனித்திறனை வளர்க்க வேண்டும்’ என, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் பேசினார்.
நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட சிஇஓ உமா முன்னிலை வகித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களும், சிறப்பான முறையில் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். பள்ளியில் சேர்ந்து இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பதற்கும், முழுகவனம் செலுத்தி, தொடர்ந்து கற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வானவில் மன்றம், இலக்கிய மன்றம், கலைத்திருவிழா போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்து, மாணவர்களின் தனித்திறனை வளர்க்க வேண்டும். ஆய்வு அலுவலர்கள், பள்ளியை ஆய்வு செய்து, கற்றல், கற்பித்தில் தரமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மழை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலைப்பாதுகாப்பு, போதை பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டிஇஓக்கள் கற்பகம், ஜோதி, பச்சமுத்து, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment