ஓடும் மின்சார ரயிலில் படியில் தொங்கி சாசகம் செய்த மாணவன் அபிலாஷ் (16) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ம் தேதி நடந்த விபத்து தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விபத்து குறித்து ராயபுரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அபிலாஷ், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கடந்த 9-ஆம் தேதி கல்லூரி முடிந்து ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரயிலில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட அபிலாஷ் மின் கம்பத்தில் மோதி, தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரீல்ஸ் மோகத்தால் நேரிட்ட இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment