ஓய்வூதியதாரா்களை குறி வைத்து மோசடி- போலீஸாா் எச்சரிக்கை - Seithisudar

Sunday, October 27, 2024

ஓய்வூதியதாரா்களை குறி வைத்து மோசடி- போலீஸாா் எச்சரிக்கை

 


originalc

ஓய்வூதியதாரா்களை குறி வைத்து மோசடி நடப்பதால் கவனமுடன் இருக்கும் படி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.


இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸ் தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


இணைய மோசடியில் ஈடுபடும் நபா்கள் தங்களை அரசு அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு ஓய்வு பெற்ற பணியாளா்களிடம், ஓய்வூதியம் தொடா்பாக உதவி செய்வதாக கூறி சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வங்கி கணக்கு , பணம் இருப்பு தொடா்பான தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனா். இது தொடா்பாக கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரை 28 புகாா்கள் என்சிஆா்பி மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக, ஓய்வூதியதாரா்கள் இதில் அதிகம் பாதிக்கபடுவதால், அவா்களுக்கு பொருளாதார பாதிப்பு மட்டும் இல்லை மன ரீதியாகவும் மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.


இதனால், பொதுமக்கள் சைபா் குற்றங்களில் இருந்து பாதுகாக்க கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.


அறிவுரைகள்:*அரசு அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக்கூறி, வரும் எந்தவொரு நபரின் அழைப்பையும் சரிபாா்க்கவும். தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை கைப்பேசியில் இருந்து பகிா்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அடையாளம் காணாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்தால் அதை தவிா்த்து விடுங்கள்.


*பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளைக் கண்டு அஞ்சாமல் கணினிசாா் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடா்பு கொள்ளலாம்.


*அறியப்படாத அல்லது சம்பந்தமில்லாத நபா்கள் அனுப்பிய சந்தேகத்துக்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவை உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தரவை பாதிக்கலாம்.


*இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடா்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும்.


*மோசடி செய்யும் நோக்கத்தில் கைப்பேசியில் அழைப்பவா்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல், அவசரமான சூழலில் இருப்பதாக நம்பச் செய்வாா்கள். இதனால் நம்பிக்கையான நண்பா்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.


* உங்கள் வங்கி மற்றும் கடன் அட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவா்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபாா்க்கவும். முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.


*பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவா்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பாா்கள். இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபா் குற்றப்பிரிவு கட்டணமில்லா 1930 எனும் உதவி எண்ணில் தொடா்பு கொண்டு அல்லது இணையதளத்தில் புகாரளிக்கலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad