மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், 1992ல் இருந்து தற்காலிக ஆசிரியராக செக்கானுாரணி, புளியங்குளம் மூர்த்தி, 60, பணியாற்றி வந்தார்.
இவர் மீது பிளஸ் 1 மாணவி டிச., 3ல் மதுரை கலெக்டரிடம் பாலியல் புகார் அளித்தார். பள்ளிக்கல்வி நிர்வாகம் ஆசிரியரை நீக்கியது. இதை கண்டித்து நேற்று காலை, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முன் அமர்ந்து, ஆசிரியர் மூர்த்தி வந்தால் தான் பள்ளிக்கு வருவோம் என வலியுறுத்தி போராடினர்.
இப்பள்ளியில் பணியாற்றும் அரசு ஆசிரியர் ஒருவரின் துாண்டுதலால் பள்ளி மற்றும் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதாக கூறி, எட்டூர் கமிட்டி மற்றும், கிராம மக்கள் சார்பில் அந்த ஆசிரியரை இடமாற்றம் செய்யகோரி, மாவட்ட கள்ளர் சீரமைப்பு துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டி போலீசார் மாணவர்களிடம் பேசினர். வழக்கு பதிந்துள்ளதால் விசாரணைக்கு பின் தவறு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்தனர்.
திங்கட்கிழமை, ஆசிரியர் மூர்த்தி பணிக்கு வரவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment