உடல் எடையை குறைப்பதில், உடற்பயிற்சியைப் போலவே, டயட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், டயட்டில் கட்டுப்பாடு இல்லை என்றால் உடல் எடை குறையாது. அதற்கு மிக குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் அவசியம்.
நாம் சாப்பிடும் உணவுக்கும், ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதால், நமது உணவுப் பழக்க வழக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் தொப்பை கொழுப்பு கரைய, நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளை அறிந்து கொள்ளலாம்.
தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது உண்மையில் சவாலான காரியம் தான். ஆனால், உணவு பழக்க வழக்கத்தில் கொண்டுவரும் மாற்றங்கள், உங்கள் எடை இழப்பு முயற்சியில் எளிதாகும். அந்த வகையில் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்ட சில காய்கறிகளை அறிந்து கொள்ளலாம். இவற்றில் குறைவான கலோரி அதிக நார்சத்து உள்ளதால், கொழுப்பை சிறப்பாக கரைக்கிறது
சுரைக்காய்:
அதிக நீர்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த கலோரி கொண்ட சுரைக்காய், கொழுப்பை கரைக்க நினைப்பவர்களுக்கு அற்புதமான தீர்வாக இருக்கும். கூடுதலாக நார்சத்தும் இதர சத்துக்களும் அதிகம் உள்ளது. உடல் பருமனை குறைப்பதுடன், இது உடலில் சேரும் நச்சுக்களையும் நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.
கீரை:
எண்ணற்ற ஊட்டச்சத்துக்களுடன் மிகக் குறைந்த கலோரிகளை கொண்ட கீரை, பசி கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதிக அளவிலான நார்ச்சத்தும் உள்ளது. கீரையை அளவிற்கு அதிகமாக வேகவிடாமல் சாப்பிடுவதால் ஊட்டச்சத்தின் பலன்களை முழுமையாக பெறலாம்.
காலிபிளவர்:
குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட காலிபிளவர் தொப்பை கொழுப்பை கரைப்பதோடு, ஹார்மோன்களையும் சீராக்கும் தன்மை கொண்டது. நார்சத்து அதிகம் உள்ளதால் பசியை கட்டுப்படுத்தி, வயிறு நிறைந்த உணர்வை தரும்.
கேரட்:
கண்பார்வை குறைபாடுகளை நீக்கும் ஆற்றல் கொண்ட கேரட், மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது. வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கேரட்டை வேக வைத்து சாப்பிடுவதை விட சாலட் ஆக சாப்பிடுவது அதிக பலன் தரும்.
வெள்ளரிக்காய்:
நீர்ச்சத்து அபரிமிதமாக நிறைந்துள்ள காயான வெள்ளரிக்காய், கொழுப்பையும் நச்சுக்களையும் நீக்கும் அற்புதமான காயாகும். மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறியை சாலட் ஆக சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
ப்ரோக்கோலி:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, மிகவும் அற்புதமான தேர்வாக இருக்கும். கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட கலவைகள் இதில் நிறைந்துள்ளன. அதோடு நார்ச்சத்து நிறைந்துள்ளதால், பசியை கட்டுப்படுத்தி, அக்குள்ளப்படும் கலோரி அளவை குறைக்கிறது. இதனை அளவுக்கு அதிகமாக வேக விடுவதால் சத்துக்கள் இழந்து விடும் என்பதால், அளவோடு சமைத்து சாப்பிடுவது பலன் தரும்.
பாகற்காய்:
கசப்பு சுவை கொண்ட பாகற்காய், பலருக்கு பிடிக்காத காய்கறி என்றாலும், தொப்பை கொழுப்பை கரைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல பலனை தரும் என்பதை மறுக்க இயலாது. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்சத்துக் கொண்ட இந்த காய்கறி, இரத்த சர்க்கர அளவை கட்டுப்படுவதிலும் சிறப்பாக செயல்படும்.
No comments:
Post a Comment