ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை 2 ஆண்டுகள் நிருத்ததி வைக்க கோரிக்கை? - Seithisudar

Thursday, May 29, 2025

ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை 2 ஆண்டுகள் நிருத்ததி வைக்க கோரிக்கை?

 



அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை , பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.


தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு , பொதுச் செயலாளர் வெ.சரவணன், மாநில பொருளாளர் த.ராம ஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டிருப்பதாவது


தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.6247 அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை - 1,867 .


3168 அரசு மேல் நிலைபள்ளிகளில் + 1 வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 282


3162 அரசு மேல் நிலைபள்ளிகளில் + 2 வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 436 என்று வெற்றி வாகை சூடியுள்ளது.

 7.5 இட ஒதுக்கீடு மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை இந்த ஆண்டும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு வெகுவாக கூடி உள்ளது .. 


எனவே அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் ஆகிய அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு பணி நிரவல் கலந்தாய்வை மாணவர் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அதே போல அனைத்து

 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை ஜூன் 2025 மாதத்திற்குள் அரசு நடத்திட ஆவண செய்ய கேட்டுக் கொள்கிறோம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ்19260

ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார் . எனவே மாணவர்களின் கல்வி நலனைகருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 500 ஐ தாண்டும் பள்ளிகளில் கூடுதலாக அலுவலகப் பணிகளை துரிதப்படுத்த உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர், ஏஐ பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.மாணவர்கள் கணினி அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள கணினி ஆசிரியர்களை நியமிக்க கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க ஆவண செய்ய வேண்டும்


பள்ளிகளில் கழிவறை தூய்மை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நிதி அதிகரிக்க வேண்டும். அவை உரிய கால இடைவெளியில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் கழிப்பறைகள், தேவையுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகின்றோம்.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot