’பெரிய பாய்’ என்ற தன்னை அழைப்பதற்கு A.R.ரஹ்மான் எதிர்ப்பு - Seithisudar

Tuesday, May 20, 2025

’பெரிய பாய்’ என்ற தன்னை அழைப்பதற்கு A.R.ரஹ்மான் எதிர்ப்பு

 



இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை புனைப்பெயர் வைத்து அழைப்பதற்கு அவர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான், இன்று உலகளவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.


படங்களின் வெற்றிக்கு இவரது பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்காற்றும் நிலையில், இவரை இசைப்புயல் என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.


இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இளம் ரசிகர்கள் இவரை ’பெரிய பாய்’ என்ற புனைப்பெயர் கொண்டும் அழைத்து வருகின்றனர்.


இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.


படத்தின் முதல் பாடல், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


விளம்பரப் பணிகளில் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மான் நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.


அந்த நேர்க்காணலில் ஏ.ஆர். ரஹ்மானை பெரிய பாய் என்ற புனைப்பெயருடன் தொகுப்பாளர் அழைத்தார். இதனைக் கேட்டு சிரித்த ரஹ்மான், ”பெரிய பாய், சின்ன பாய் என்று அழைப்பதற்கு, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன்? இந்த பெயர் பிடிக்கவில்லை” என்று நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


ஏ.ஆர். ரஹ்மானின் இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot