அலைக்கழிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் - Seithisudar

Thursday, May 29, 2025

அலைக்கழிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள்

 



அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், காலணிகள் உட்பட, 14 விலையில்லா பொருட்களை தமிழக அரசு வழங்குகிறது. இந்த, 14 பொருட்களும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே முழுவதுமாக கிடைக்கின்றன.


இந்த விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கு வழங்க, வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அரசு நிதி ஒதுக்குகிறது. அதை அந்த அலுவலகத்தினர் பயன்படுத்துவது இல்லை.


அதற்கு மாறாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நேரில் வரவழைத்து, கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும்படி நிர்பந்திக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைமை ஆசிரியர்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.


இதனால், இரு தரப்பு பிடிவாதத்தாலும் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் கிடைக்காத பள்ளிகளும் உள்ளன. அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி, ரூட் மேப் வாயிலாக பொருட்கள் சென்றடைய, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த கல்வியாண்டில், இப்பிரச்னை தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்தாண்டிலும் அதே பிரச்னை தொடர்வதாக தலைமை ஆசிரியர்கள் புகார் அளித்துஉள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot