தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி வெயில் - வெளியே வராதீங்க - Seithisudar

Saturday, May 3, 2025

தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி வெயில் - வெளியே வராதீங்க

 




அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை (மே 4) தொடங்குகிறது. 

அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கும்.


தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் இந்த கத்திரி வெயில் காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.  சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.


இந்த காலத்தில் முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். அடுத்த நாட்களில் வெப்பம் குறையத் தொடங்கும். 


அறிவியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


கத்திரி வெயிலின்போது வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 


மதியம் 12 மணிக்கு மேல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்களை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். நீர் ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot