அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார்'' என தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து விட்டு தற்போது குழு அமைத்திருப்பதாகவும், அதன் அறிக்கையை செப்டம்பரில் அமல்படுத்துவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 9 அறிவிப்புகளையும் ஆணையாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.
கொரோனாவின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் விடுப்புக்களை பணமாக்கலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த அறிவிப்பு தற்போது 4 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார்.
புதிய ஓய்வூதியத்திட்டத்தால் 6.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றால் 200 தொகுதி வெற்றி பெறுவோம் என்பதை தி.மு.க., கூற முடியாது.
கல்வித்துறையில் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இடை நிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் வித்யாசம் உள்ளது. தொடக்க கல்வி ஆசிரியர்களாக பெண்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தால் 80 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு இல்லாமல் மாறுதல் பெற முடியாமல் உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment