Chennai IIT - 4 புதிய படிப்புகள் அறிமுகம் - Seithisudar

Wednesday, May 28, 2025

Chennai IIT - 4 புதிய படிப்புகள் அறிமுகம்

 



2 பிடெக் படிப்புகள் உள்பட சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு 4 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையின் தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கிலும், 


சென்னை ஐஐடி-யில் பிஎஸ் வேதியியல், எம்டெக் எலெக்ட்ரிக் வெகிக்கில்ஸ், பிடெக் கம்ப்யூடேஷனல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்ஸ், பிடெக் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஆகிய 4 புதிய படிப்புகள் 2025-2026-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


பிஎஸ் வேதியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (ஐசர்) நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், எம்டெக் எலெக்ட்ரிக் வெகிக்கில்ஸ் படிப்புக்கான சேர்க்கை கேட் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், மற்ற இரு பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜெஇஇ நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot