அங்கன்வாடி மையத்தை திடீரென ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - Seithisudar

Monday, June 16, 2025

அங்கன்வாடி மையத்தை திடீரென ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 



வலுவான நாளைய தலைமுறையை உருவாக்கிடும் பொறுப்பு, அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேனி மாவட்டம் வீரபாண்டியில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையத்தை இன்று ஆய்வு செய்தோம்.


இந்த மையத்திற்கு வருகிற குழந்தைகளின் எண்ணிக்கை – பணியாளர்கள் – செவிலியர்களின் வருகை – பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் விவரம் – உணவு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு போன்றவைகளை ஆய்வு செய்தோம்.


குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் – அவர்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவத் துறை சார்ந்த சேவைகள் – உடல்நலன் உள்ளிட்டவைகள் குறித்து பணியாளர்களிடம் – தாய்மார்களிடமும் கேட்டறிந்தோம்.உடல் ரீதியாகவும் – மன ரீதியாகவும் வலுவான நாளைய தலைமுறையை உருவாக்கிடும் பொறுப்பு, அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென அங்கிருந்த அதிகாரிகள் – பணியாளர்களை அறிவுறுத்தினோம்.”இவ்வாறு தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot