கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்களை கட்டிக்கொண்டு மனு அளித்தனர்.
கடந்த, 2012ம் ஆண்டுக்கு பின், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே வேலை என, அரசு அறிவித்தது.
இதையடுத்து, 2012, 2013, 2017, 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 2012ல், தேர்வில் தேர்ச்சி பெற்ற, 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
2013 முதல் 2022 வரை நடந்த தகுதி தேர்வுகளில் இடைநிலை ஆசிரியர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று, பணி வாய்ப்புக்காக காத்திருந்தோம். ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை.
இந்நிலையில், 2024ம் ஆண்டும் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, இடைநிலை ஆசிரியர்கள், 25 ஆயிரம் பேர் தேர் வெழுதினோம். இதில், 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2,768 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாக, 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடம் இருக்கும் நிலையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை கூட நிரப்பவில்லை. ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதலில் பணிநியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment