இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டம் இருக்க முடிவு - Seithisudar

Tuesday, September 19, 2023

இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் போராட்டம் இருக்க முடிவு

 



பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.


பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பேச்சால் அதிர்ச்சியடைந்த பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள், தங்களது போராட்டத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின், பொள்ளாச்சி தெற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார் மற்றும் மனோஜ் கூறியதாவது:


ஏற்கனவே, தி.மு.க.,வின், 311வது தேர்தல் வாக்குறுதியான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்டமாக சென்னையில், கோரிக்கை வெல்ல ஆயத்த மாநாடு நடத்தினோம்.


இரண்டாவது கட்டமாக, செப்., 5ம் தேதி முதல் வரும், 27ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.


அதிலும், அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என செப்., 28ம் முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.


இந்நிலையில், கடந்த, 14ம் தேதி ஒரு திருமண விழாவில்தமிழக முதல்வர், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மீதம் உள்ள ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எனவே, உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டும் தனியாக பங்கெடுக்காமல் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.


இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot