காலாண்டுத் தோ்வு இன்று தொடக்கம் - Seithisudar

Friday, September 20, 2024

காலாண்டுத் தோ்வு இன்று தொடக்கம்

 




மிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தோ்வு வெள்ளிக்கிழமை (செப்.20) முதல் நடைபெறவுள்ளது.


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் காலாண்டுத் தோ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான தோ்வு வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகளுக்கான தோ்வு செப்.27-ஆம் தேதி நிறைவடையும்.


அதேவேளையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு வெள்ளிக்கிழமை முதல் செப்.27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக் கல்வியின் ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot