தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் இணை செயலர் சிவகுமார் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., நர்ஸ்கள் உட்பட மூன்று லட்சம் பேருக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment