கோவை மாவட்டத்தில், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காக்கைக்கு முதலுதவி செய்யும் தீயணைப்பு வீரரின் விடியோ வைரலாகியிருக்கிறது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே மின்மாற்றி அருகே பறந்துகொண்டிருந்த காகம் ஒன்று, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தது. இதனைப் பார்த்த தீயணைப்பு வீரர், சி.பி.ஆர். என்ற முதலுதவியை செய்து காகத்தைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் வெளியாகியிருக்கிறது.
கோவை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மின் மாற்றியில் அமர்ந்த காக்கை ஒன்று மின்சாரம் பாய்ந்து சாலையில் விழுந்தது. இதைக் கண்ட தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை காக்கையை எடுத்து இதயத்துடிப்பை வர வைக்க சி.பி.ஆர். எனப்படும் முதலுதவியை செய்தார்.
பிறகு, காகத்தின் வாயில் காற்றை ஊதினார். இதில் சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது. இதையடுத்து அதனை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிழலில் விட்டனர். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய காக்கை அங்கிருந்து பறந்து சென்றது.
காகம்தானே என்று விட்டுவிடாமல், சி.பி.ஆர். சிகிச்சை செய்து காக்கையை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளைதுரைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment