உயர்கல்விக்கு கனடா செல்ல திட்டமா? அரசு கொண்டுவரும் புதிய நெருக்கடி - Seithisudar

Thursday, September 19, 2024

உயர்கல்விக்கு கனடா செல்ல திட்டமா? அரசு கொண்டுவரும் புதிய நெருக்கடி

 


4732


மாணவர்களுக்கான விசா உரிமத்தைக் குறைக்க முடிவெடுத்திருப்பதாக கனடா அரசு அறிவித்திருப்பது, இந்திய மாணவர்கள் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா உரிமத்தை இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வருவோரால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்தான், ஆனால் இந்த முறையை தவறாகப் பயன்படுத்தி அடிப்படையிலேயே அத்துமீறல்கள் நடக்கிறது. எனவே அதனை நாங்கள் ஒடுக்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.


கனடா அரசு, ஏற்கனவே, தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.


இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் வெளிநாடுகளில் முதலிடத்தில் கனடா உள்ளது. எனவே, கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு, இந்திய மாணவர்களைத்தான் அதிகம் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, கனடாவில் சுமார் 4.27 லட்சம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad