திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான 100 மீட்டா் ஓட்டப் போட்டியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனும் பங்கேற்றாா்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கியது.
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை அரசு அலுவலா்களுக்கான தடகளம், இறகுப் பந்து, கையுந்துப் பந்துப் போட்டிகள் நடைபெற்றன.
அரசு அலுவலா்களுடன் 100 மீட்டா் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனும் ஓடினாா்.
No comments:
Post a Comment