லஞ்சம் கேட்ட BEO அலுவலகப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Seithisudar

Wednesday, October 23, 2024

லஞ்சம் கேட்ட BEO அலுவலகப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

 

தேர்வு நிலை ஆணை வழங்க லஞ்சம் கேட்ட அலுவலகப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.


ஆனைமலை வட்டார கல்வி அலுவலக ஊழி யர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுத்தியுள்ளனர்.


தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறியதாவது:


ஆனைமலை ஒன்றியம் வாழைக்கொம்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக முனீஸ்வரன் பணியாற்றி வருகிறார். இவரது தேர்வுநிலைக்கான சான்று இது நாள் வரை வழங்கப்படவில்லை.இது குறித்து அவர் கேட்டால், வட்டார கல்வி அலுவலர்களும் சரியான தகவல் தரவில்லை. இதற்கு ஊழியர் ஒருவர் லஞ் சம் கேட்டதாக ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, ஊழியர் மீது கொடுத்த புகா ரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து வட்டார கல்வி அலுவல கங்களிலும் ஆசிரியர்களின் பணப்பலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற இது போன்ற நிலைமையே நீடிக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு, கூறினர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot