தீபாவளிக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் - சீமான் - Seithisudar

Wednesday, October 23, 2024

தீபாவளிக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் - சீமான்

 




அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.


கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க. அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும். 


ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் தி.மு.க. அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் குறை ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள்.


ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதோடு, நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot