வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - Seithisudar

Tuesday, October 8, 2024

வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

 

ள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பலருக்கு கடந்த மாத சம்பளம் வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.


இதுகுறித்து திண்டுக்கல்லில் சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 


பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் மாநில திட்ட இயக்குநர், கூடுதல் மாநில திட்ட இயக்குநர், இணை இயக்குநர், மாநில மாவட்ட திட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், 


இயன்முறை மருத்துவர்கள், மாவட்ட வட்டார கிராமக்கல்விக்குழு கணக்காளர்கள், கட்டடவியல் பொறியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கணினி வகைப்படுத்துவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 32,500 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.


மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிடவும், வரும் காலங்களில் சம்பளத்தை அம்மாதத்தின் இறுதி வேலை நாட்களில் வழங்கிட கோரியும் நாளை (அக்., 8) தமிழகம் முழுவதும் கலெக்டரிடம் மனு அளிப்பதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot