காலாண்டு தேர்வு விடைக்கான மதிப்பெண்களை தனித்தனியாக 'எமிஸ்'- இணையத்தில் பதிவேற்ற கூறுவதால் ஆசிரியர்கள் பணிச்சுமையில் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி தலைமைஆசிரியர், ஆசிரியர்கள், பல்வேறு விபரங்களை 'எமிஸ்'- ல் பதிவேற்றம் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது. இப்பணியால் மாணவர்களுக்கு கற்பித்தல்பணி, பிற அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
'எமிஸ்' பணியால் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 7,000 பேரை புதிதாக நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மட்டுமே பார்த்தால் போதும் என தெரிவித்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் தற்போது காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை மதிப்பீடு செய்வதில் ஒவ்வொரு வினாவிற்கான விடைக்குரிய மதிப்பெண்களை தனிதனியாக கணக்கிட்டு அம்மதிப்பெண்களை 'எமிஸ்' ல் பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியர்களை வலியுறுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர்.
No comments:
Post a Comment