கனமழை - வானிலை அறிக்கை! - Seithisudar

Saturday, November 16, 2024

கனமழை - வானிலை அறிக்கை!

 



தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.


சென்னையைப் பொறுத்தவரைப் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான மழைப் பதிவானது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.


இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று(நவம்பர் 15) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


16-11-2024 மற்றும் 17-11-2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையில் இன்று இரவு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக கடலோரப்பகுதிகள்:


15-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அதனால் மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot