2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தி.மு.க., தொடங்கி உள்ள நிலையில், அரசு ஊழியர் சங்கங்களும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளன.
2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க., தற்போதே பிரசாரத்தை தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரையும் தங்களின் கட்சிக்கு ஆதரவாக மாற்ற நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் அரசின் மீதான எதிர்ப்பை பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களும் கையிலெடுத்துள்ளன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு நெருக்கடி கொடுக்கும் பணிகளை அரசு ஊழியர்களும் தற்போதே தொடங்கி விட்டனர்.
அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது : தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் பேச்சுவார்த்தை மட்டுமே அவ்வப்போது நடத்துகின்றனரே தவிர பெரும்பாலான கோரிக்கைகள் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கிறது. அதற்குள் அடுத்த சட்டசபை தேர்தல் வந்துவிட்டது.
கொடுத்த வாக்குறுதிகளை ஏதும் நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கான பிரசாரத்தை கையிலெடுத்துள்ள தி.மு.க., இந்த முறை கட்டாயம் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளிக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் எங்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தியே போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment