மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 'சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 7 ஆயிரத்து 650 ஆசிரியர் பணியிடங்கள் மத்திய பல்கலைகழகங்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ம் தேதி வரை 5 ஆயிரத்து 182 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.
பல்கலைக்கழக மானியக்குழு துவக்கிய சியு-சயான் எனும் வேலைவாய்ப்பு இணையதளம் வாயிலாக காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை பெறலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment