தனிநபர் ஜிடிபி-யில் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி 56 சதவிகிதம் அதிகமாக உள்ளதாக சிஐஜி தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டுக்கான தமிழ்நாடு மாநிலத்தின் நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 2018-2019 நிதியாண்டில் ரூ.16.30 லட்சம் கோடியாக இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2022-23ம் நிதியாண்டில் ரூ.23.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 2021-22ம் நிதியாண்டை விட 2022-23ம் நிதியாண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 14.16% அதிகரித்துள்ளது. இதேபோல் தனிநபர் ஜிடிபி-யில் தேசிய சராசரியை விட, தமிழ்நாட்டின் சராசரி 56% அதிகமாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் தனிநபர் ஜிடிபி ரூ.3.08 லட்சமாக உள்ளது.
ஆனால், தேசிய தனிநபர் ஜிடிபி ரூ.1.96 லட்சமாக உள்ளது. 2021-2022ம் நிதியாண்டின் ரூ.1.60 லட்சம் கோடியாக இருந்த சொந்த வரி வருவாய், 2022-2023ம் நிதியாண்டில் ரூ.1.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த வருவாய் வரவு ரூ.2.07 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
2021-2022ம் ஆண்டின் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2022-2023ம் நிதியாண்டில் ரூ.36,215 கோடியாக குறைந்துள்ளது. 2022-2023 நிதியாண்டில் தமிழ்நாட்டின் கடன் ரூ.6,91,591 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டில் ரூ.6,467 கோடியாக இருந்த கடன் 3 மடங்கு அதிகரித்து ரூ.21,980 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் ககுறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment